விளை நிலங்களை சேதப்படுத்தும் மக்னா யானை; பொதுமக்கள் பீதி

விளை நிலங்களை சேதப்படுத்தும் மக்னா யானை;   பொதுமக்கள் பீதி

 பாலக்கோடு அருகே இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து மக்னா யானை சேதப்படுத்துவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாலக்கோடு அருகே இரவு நேரங்களில் விளை நிலங்களில் புகுந்து மக்னா யானை சேதப்படுத்துவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பிக்கிலிகொல்லப்பட்டி, சக்கிலிநத்தம், ஈச்சம்பள்ளம், சொக்கன் கொட்டாய் பகுதிகளில் தற்போது ஒற்றை மக்னா யானை இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து, வயல்வெளிகளில் புகுந்து குறிப்பாக விளைநிலங்களில் உள்ள சோளப் பயிர்கள், நெல், தக்காளி, கேழ்வரகு, கால்நடை தீவன பயிர்களை குறி் வைத்து சாப்பிட்டு விட்டு விடிவதற்குள் மீண்டும் வனப்குதிக்குள் சென்று விடுகிறது.

யானை நடமாட்டம் குறித்து பாலக்கோடு வனத்துறையிலுள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை மக்னா யானை வனத்தை விட்டு வெளியே வராதபடி, பட்டாசுகள் வெடித்து விரட்டியடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், பட்டாசுகள் வெடிக்கும் இடத்தை தவிர்த்து விட்டு வேறு வழியாக வனத்தை விட்டு மக்னா யானை வெளியே வருவது கடந்த சில தினங்களாக தொடர்ந்து வருகிறது, இரவு நேரத்தில் எந்த திசையிலிருந்து யானை வருமோ, எப்போது தங்களை தாக்குமோ என்ற அச்சத்தில் வனப்பகுதி அருகே உள்ள கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

பாடுபட்டு விளைவித்த விளை பயிர்களை மக்னா காட்டு யானை தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதுடன், உயிர் பயத்தில் விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர்.

Tags

Next Story