குன்றத்துாரில் சேக்கிழாருக்கு மஹா அபிஷேகம்

குன்றத்துாரில் சேக்கிழாருக்கு மஹா அபிஷேகம்

மஹா அபிஷேகம் 

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில் சேக்கிழார் குருபூஜை விழாவை முன்னிட்டு, மஹா அபிஷேகம் நடந்தது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துாரில் சேக்கிழார் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மஹா அபிஷேகம் நடந்தது. குன்றத்துாரில் 12ம் நுாற்றாண்டில் அவதரித்த, சைவ மகான் சேக்கிழார். இவர், பெரியபுராணத்தை இயற்றியவர். குன்றத்துாரில் சேக்கிழாருக்கு தனி கோவில் உள்ளது. மேலும், அரசு சார்பில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. சேக்கிழார் கோவிலில் ஆண்டு தோறும் குருபூஜை விழா 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கடந்த 1ம் தேதி குருபூஜை விழா துவங்கியது. தினமும் சேக்கிழார் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் இரவு, தில்லையில் திருத்தொண்டர் புராணத்தையும், சேக்கிழார் பெருமானையும் யானை மீது அமர்த்தி அநபாய சோழமன்னன் பின்னிருந்து சாமரம் வீசும் நிகழ்வு நடந்தது. இதை தொடர்ந்து விழாவின் 10ம் நாளான நேற்று காலை சேக்கிழாருக்கு மஹா அபிஷேகம், புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. திருமுறை இன்னிசை, ஞானவேல்வி சொற்பொழிவு நடந்தது. இதை தொடர்ந்து இரவு சேக்கிழார், குன்றத்துாரில் உள்ள கந்தழீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளி சிவபெருமானின் திருவருளுடன் ஜோதியில் கலத்தல் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

Tags

Next Story