13 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமம்

13 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமம்
X

13 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது

கள்ளபள்ளியில் நடைபெற்ற 13 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, லாலாபேட்டை அருகே உள்ள கள்ள பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ யோக ஆஞ்சநேயர், ஸ்ரீ பெரியகாண்டியம்மன் கோவில் 13 ஆம் ஆண்டு மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது. இந்த கோவிலில் வருடம் தோறும் ஜனவரி மாதத்தில் மகா சண்டி ஹோமம் நடத்துவது வழக்கம். அதேபோல நடப்பாண்டிற்க்கு மகா சண்டிஹோமம் இன்று நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கோவிலை சேர்ந்த குடிப்பாட்டுக்காரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் யாக வேள்வியில் கலந்து கொண்டு, தங்கள் குலம் செழிக்கவும், உலகம் அமைதி பெறவும், நோய் நொடிகள் இல்லாத நிலை வேண்டி அனைவரும் பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற குடிப்பாட்டுக்காரர்களின் குழந்தைகளுக்கு பாத பூஜை நடத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story