மலைக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் மகா தீபம் - பக்தர்கள் பங்கேற்பு
மகா தீபம் ஏற்றம்
சிவகங்கை மாவட்டம், கீழப்பங்குடி அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது அமைந்துள்ள சிவாலயத்தில் இரண்டு பிரதான சன்னதி கொண்டு சுவாமியும் அம்மனும் அருள்பாலித்து வருகிறார்கள்.
கார்த்திகை தீபத்திருநாளை ஓட்டி மூலவர் சுவாமி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டவுடன் கோவில் அர்ச்சகர் மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபத்தை தலையில் ஏந்தி மலை உச்சியில் அடைத்தனர். இதனை அடுத்து பிரம்மாண்ட அமைக்கப்பட்ட மகா தீப குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வேத மந்திரங்களும் முழங்க தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஓம் நமசிவாய என்ற சிவ கோஷங்கள் முழங்க மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.