மகா ஜெய கணபதி கோவில் ஆண்டு விழா

மகா ஜெய கணபதி கோவில் ஆண்டு விழா

சிறப்பு பூஜை 

காங்கேயம் அடுத்த முத்தூர் அருகே மகாஜயகணபதி கோவில் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முத்தூர் அருகே உள்ள மோளாங்குட்டப்பாளையம் மகா ஜெயகணபதி கோவில் 8ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டு பாப்பினி, மடவிளாகம் ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயில் சென்று சுனை தீர்த்தம் எடுத்து வந்தனர்.

தொடர்ந்து காலை 11 மணிக்கு மங்கள இசை உடன் விழா தொடங்கப்பட்டது. நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டும், தொழில் வளம் சிறந்திடவும், பொருளாதார நிலை மேம்படுவோம், மக்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்திடவும் அக்னியாக குண்டத்தில் சிறப்பு மகா கணபதி ஹோமம் பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு மகா ஜெய கணபதிக்கு பால்,தயிர், இளநீர்,பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மடவிளாகம் சுனை தீர்த்தம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாரணை பூஜை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story