மகாசக்தி மாரியம்மன் மற்றும் வராஹியம்மன் கோவில்களில் மகா கும்பாபிஷேக விழா
வடக்கலூர் கிராமத்தில் அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் மற்றும் வராஹியம்மன் கோவில்களில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வடக்கலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி மாரியம்மன் கோவில் அப்பகுதி மக்களால் புணரமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் தொடக்கமாக ஜனவரி - 22 ம் தேதி மாலை சிவாச்சாரியார்கள் கொண்டு கணபதி ஹோமத்துடன் யாகசால பூஜை தொடங்கியது.
இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிவற்ற பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு கோவிலைச் சுற்றி வலம் வந்தது. இதனையடுத்து அருள்மிகு விநாயகர், முருகன், மகாசக்தி மாரியம்மன் மற்றும் வராஹியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிவாச்சாரியார் அசோக்ஜி தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி இன்று புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.