மானகவசேஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
மானகவசேஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா
ஆலங்குளம் அருகே மானகவசேஸ்வா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு திரண்டிருந்தோா் பக்திப் பரவசமடைந்தனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அகரத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை மானகவசேஸ்வா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. மாலையில் முதல் காலயாகசாலை பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி-அம்பாள், மும்மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியாா்கள் கோபுரக் கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனா். கும்பாபிஷேகம் நிறைவடைந்தபோது, கோபுரத்தை கருடன் வட்டமிட்டுச் சென்றது. அப்போது, அங்கு திரண்டிருந்தோா் பக்திப் பரவசமடைந்தனா்.
Next Story