ஶ்ரீ துலுக்கானத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா

ஶ்ரீ துலுக்கானத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
ஶ்ரீ துலுக்கானத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
செங்கல்பட்டு மாவட்டம், கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள ஶ்ரீ துலுக்கானத்தம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் எழுந்தருளிககும் ஶ்ரீ துலுக்கானத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாகவும் வெகு விமர்சையாகவும் நடந்தது. 04 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜை, கோ பூஜை வாஸ்து சாந்தி, மஹாபூர்ணஹுதி உள்ளிட்ட பூஜைகளுடன் விழா தொடங்கப்பட்டு, யாககால பூஜைகள், மஹா ஹோமம், நவக்கிரக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு மேல் யாக சாலை இரண்டாம் கால பூஜைகள் நடைபெற்று அதன்பின் கலசங்கள் புறப்பாடு நடத்தப்பட்டு மஹா கும்பாபிஷேகம் மூலவர் ஸ்ரீ துலுக்கானத்தம்மன் மற்றும் நவகிரங்களுக்கும் கலசங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. வெகு விமர்சையாக சிறப்பு பூஜை தீப அதாரணை நடைபற்றது.

விழாவில் கீழ்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்துக்கொண்டு ஶ்ரீ துலுக்கானத்தம்மனை தரிசித்து விட்டு சென்றனர். அனைவருக்கும்அன்னதாம் வழங்கப்பட்டது. இன்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற உள்ளது.

Tags

Next Story