குள்ளம்பாளையத்தில் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா

குள்ளம்பாளையத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குள்ளம்பாளையத்தில் புனரமைக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தென்னிலை மேல்பாகம் பகுதியில் உள்ள குள்ளம்பாளையத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாயவப் பெருமாள், ஸ்ரீ பட்டாளம்மன், ஸ்ரீ முனி வீரசாமி, ஸ்ரீ மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா அதிகாலை மங்கல இசையுடன் துவங்கியது.

பின்னர் விநாயகர் வழிபாடு, புண்யாகம்,நான்காம் கால பூஜை, மண்டபார்சனை, வேதிகார்ச்சினை, அக்னிகார்யம், ஸ்பர்சாஹூதி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் யாக வேல்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று, கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாச்சாரியார்கள் நடத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் மூலவருக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story