வெயிலுகந்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம்

வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.அக். 23ல் விக்னேஷ்வர பூஜை உடன் விழா துவங்கியது.கஜ, கோ, அஸ்வ பூஜை நடத்தி தீபாராதனை நடைபெற்றது . அதை தொடர்ந்து புண்யாகவாசனம், முதற்கால யாகசாலை பூஜை, அக். 25ல் 2ம் கால யாகசாலை பூஜை, மாலை மூன்றாம், அடுத்த நாள் 4ம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று ஆறாம் கால யாகசாலை பூஜை உடன் துவங்கிய நிகழ்ச்சியில் நேற்று காலை 7:00 மணிக்கு வெயிலுகந்தம்மன் கோயில் ராஜகோபுரம், விமான கோபுரங்கள், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இரவு அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் வந்தார். ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்திருந்தது.
Next Story


