காஞ்சியில் அம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

காஞ்சியில் அம்மன் கோவில்களில் மஹா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

தர்மராஜர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பெரிய காஞ்சிபுரம், செங்கழுநீரோடை வீதி, கிழக்கு பகுதியில் தர்மராஜர் உடனுறை திரவுபதியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 5ல், கணபதி ஹோமத்துடன் யாகசாலை துவங்கியது.

நேற்று, காலை 8:30 மணிக்கு குடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, கோவில் கோபுர விமானம், மூலஸ்தானம், பரிவார மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. காலை 11:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது.  காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுகாவேரிபாக்கத்தில்,

அருள்தரும் அன்னை ஆதி மஹா காளிகாம்பாள் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 5ல், காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. மாலை 4:40 மணிக்கு அங்குரார்ப்பனம், ஆச்சார்ய ரக் ஷாபந்தனம், கும்ப அலங்காரமும், தொடர்ந்து முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று, காலை 9:00 மணிக்கு விமான கோபுரங்களுக்கும், மூலஸ்தான பரிவார மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு மஹா தீபாராதனையும், பக்தர்களுக்கு விபூதி, குங்கும, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story