குருவிமலை ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே 21 அடி உயர ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் அருகே 21 அடி உயர ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 21 அடி உயர ஸ்ரீ. வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று கணபதி ஹோமம், நவகிரக ஹோமம்,கும்பலங்காரம், வாஸ்து சாந்தி,பூர்ணாஹூதி, முதல் கால யாகசாலை பூஜைகள், மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து, இன்று காலை 8:00 மணிமுதல் விஷ்வசேனர் ஆராதனை,கோபூஜை ,நாடி சந்தானம், பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர், 11:30 மணியளவில் மங்கள இசையுடன் சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு நடைபெற்று யாகசாலை சுற்றி மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து 21 அடி உயரமுள்ள ஸ்ரீ.வீர ஆஞ்சநேயர் பெருமான் மேல் யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலச நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தேறியது.

தொடர்ந்து, தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களின் மேல் புனித கலச நீர் தெளிக்கப்பட்டது. இதில்,குருவிலை கிராமத்தை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்ற நாள் முதல் 48 நாட்களுக்கு தொடர்ந்து மெண்டல் அபிஷேகம் நடைபெற்று மண்டல அபிஷேக பூர்த்தி நிறைவுபெறும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story