முத்துமாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
பருக்கல் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் , அச்சிறுபாக்கம் அடுத்த பருக்கல் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன், கங்கை அம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன், விநாயகர், , முருகர், நவகிரகங்கள் உள்ளிட்ட ஆலயங்கள் புதியதாக கிராம மக்களால் ஒன்றிணைந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பாபிஷேக விழாவானது ஏப்ரல் 21-ந் தேதி காலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோபூஜை, கணபதி பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளன்று வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும், கும்பாபிஷேக தினமான இன்று காலை 6 மணிக்கு மங்கள இசையுடன் இரண்டாம் கால யாக பூஜையுடன் யாகசாலையில் மகா தீபாரதனையும் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ஶ்ரீ விநாயகர், முருகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன் ஆகிய கோயில்களின் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு மற்றும் நவகிரகங்களுக்கும் காலை 10:30 மணிக்கு புனித நீரினை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.