சூரியம்பாளையம் பழனியாண்டவர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சூரியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பழனியாண்டவர் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று பின்னர் யாக வேள்விகள் நடைபெற்றது. கோவில் குடி பாட்டுக்காரர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிறகு புனித நீரை கோவில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்று கலசத்தில் ஊற்றி, கும்பாபிஷேக விழாவை மிக விமர்சையாக நடத்தினர் சிவாச்சாரியார்கள். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டு,மஹா தீபா ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்

Tags

Next Story