ஸ்ரீ அஞ்சூரம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீ அஞ்சூரம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா
ஸ்ரீ அஞ்சூரம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் விழா

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சோத்துபாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான கிராம தேவதை அருள்மிகு. அஞ்சூரம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் ஆலய புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்திற்கான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு கடந்த 17 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமுத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து,மாலை முதல் காலையாக சாலை பூஜையும் யாகசாலை மகா தீபாரதனையும் நடைபெற்றது.விழாவில் இரண்டாவது நாளன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜையும் மூலவர் பிரதிஷ்டை செய்தல் மாலை மூன்றாம் காலயாக சாலை பூஜையும் நடைபெற்றன.கும்பாபிஷேக விழா அன்று காலை 6 மணி முதல் ஏழு முப்பது மணி வரை நான்காம் கால யாகசாலை பூஜையும் யாகசாலை விருந்து கும்பங்கள் புறப்பட்டு கோயிலை வளம் வந்து கோபுரத்தை அடைந்தன.

அதனைத் தொடர்ந்து,கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது.அதன்பின்னர் மூலவரான அஞ்சூரம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம் அலங்கார ஆராதனை தீபாதனையும் நடைபெற்றன.விழா குழுவின் சார்பில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன. .

Tags

Next Story