எறும்பூர் அருள்மிகு சக்தி முனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
கோவில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரணமல்லூர் அடுத்த எறும்பூர் கிராமத்தில் புதியதாக அருள்மிகு சக்தி முனீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு திருப்பணி நடந்து முடிந்து கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு 25ஆம் தேதி காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை ,கரிக்கோலம் ஆகிய நிகழ்வுகள் நடந்தது.
மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, சிலைகள் பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை, மகா தீப ஆராதனை நடந்தது. நேற்று 26 ஆம் தேதி காலை கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, தம்பதிகள் சங்கல்பம் ,பூர்ணஹோதி, பின் கலசம் புறப்பாடுதலுடன் மேளதாளத்துடன் வலம் வந்து கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றிமகா கும்பாபிஷேகம், நடந்தது பின்னர் மூலவருக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு வான வேடிக்கையுடன் நாடகம் நடைபெற்றது. இன்று மாலை 6 மணிக்கு சக்தி முனீஸ்வர ஸ்வாமி திருவீதி உலா நிகழ்வு நடைபெற உள்ளது. நாளை28ஆம் தேதி இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கனகராஜ், பெருமாள், சண்முகம் ,சந்திரன், ஆனந்தன், பானுமுருகன், ஜெயக்குமார், குருசாமி ,வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட விழா குழுவினர்,
கிராம பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.