பத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

பத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா

 தனக்கன்குளத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.  

தனக்கன்குளத்திலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

மதுரை மாவட்டம் தனக்கன்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவில் நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது.

ஆலய நிர்வாகிகள் பால்ராஜ் பொன்னுத்துரை சந்திரகுமார் சரவண பகவான் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தலைமையில் நாராயண சாஸ்திரிகள் சுவாமிநாத சர்மா சிவசுப்பிரமணிய சர்மா ஆகியோர் முன்னிலையில நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் நான்கு கால யாகசாலை பூஜைகள் முடிந்து யாகசாலையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரானது கோபுர கலசத்துக்கு ஊற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story