முனியப்ப சாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா !

முனியப்ப சாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா !

கும்பாபிஷேக விழா

சங்ககிரி :முனியப்ப சாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட அரசிராமணி செட்டிப்பட்டி பொன்னு சமுத்திரம் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முனியப்பசாமி ஆலய மஹா கும்பாபிஷேக விழா சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க இரண்டு கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட பூரண கும்பத்தை எடுத்துக்கொண்டு பம்பை மேல காலங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து அருள்மிகு முனியப்பசாமிக்கு புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டு தீபாராதனை காமிக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு முனியப்பசாமியை வழிபட்டு சென்றனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story