மகா மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்
தேரோட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பென்னக்கோணம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மகா மாரியம்மன் கோயில் 2 ம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டம் கடந்த 3-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது, இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார் சாமிகள் மலர் அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மே - 13ம் தேதி வெகு விமர்சனம் நடைபெற்றது.
இதில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதை தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் மேள தாளங்கள் முழங்க திருத்தேரில் எழுந்தருளி.பக்தர்களுக்கு காட்சி அளித்தார், இதனை தொடர்ந்து கிராம பகதர்கள், பொது மக்கள், திருத்தேரை இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதில் பெண்ணை கோணம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் தீயணைப்பு துறை பணியில் ஈடுபட்டிருந்தனர் மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக உறுப்பினர் செய்திருந்தனர்.