மகா மாரியம்மன் கோவில் விழா - பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திகடன்

மோகனூர் அருகே தீர்த்தாம்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் நடந்த மாசிமாத திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் , மோகனூர் ஒன்றியம் தீர்த்தாம்பாளையத்தில் உள்ள மஹா மாரியம்மன் ஆலயத்தில் மாசிமாத திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் நாள் நிகழ்வாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்வு மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் மணப்பள்ளி காவிரியாற்றிலிருந்து சிறிய தேரில் உற்சவ மாரியம்மனை சுமந்தவாறு பல்வேறு ஊர் மற்றும் வீதிகள் வழியாக வருகை தந்து கோவில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி பூங்கரகத்துடன் இறங்கிய பின் அனைத்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடன் செய்தனர். இதில் ஏராளாமானர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மிக சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story