மகா முத்து மாரியம்மன் கோவில் சுற்றுப் பொங்கல் திருவிழா

மகா முத்து மாரியம்மன் கோவில் சுற்றுப் பொங்கல் திருவிழா

மாரியம்மன் கோவில் திருவிழா 

மகா முத்து மாரியம்மன் கோவில் சுற்றுப் பொங்கல் திருவிழா அலகு குத்தி பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றினர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சிவானந்தா சாலை கிழக்குத் தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் சுற்றுப் பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சுற்றுப் பொங்கல் மாரியம்மன் சாமிக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கிழக்குத் தெரு பகுதியில் இருந்து செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேக ஆராதனைகள் நடத்தி பின்னர் அங்கு ஐந்துக்கும் மேற்பட்டோர் 20 அடி அகலம் கொண்ட அலவுகுத்தி முக்கிய வீதி வழியாக ஆடிப்பாடி மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர்.

பின்னர் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த பச்சை பந்தலில் சாமி தரிசனம் செய்து பின்னர் பொங்கலிட்டு மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story