ரங்கநாதர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்
மகா சம்ப்ரோக்ஷணம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருநாங்கூர் பகுதியில் உள்ள 11 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தெற்றியம்பலம் செங்கமலவல்லி தாயார் சமேத பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன இன்று 7ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து காலை 11:15 மணிக்கு யாகசாலையில் இருந்து கடன்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பெருமாள், தாயார், கருடன் சன்னதி விமானங்களுக்கு பூஜித்த புனித நீரைக் கொண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைத்தனர்.
இதனை அடுத்து மூலவர் மூர்த்திகளுக்கு சம்ப்ரோக்ஷணம் நடத்தி வைக்கப்பட்டதுதொடர்ந்து தளிகை அமுது படையில், வேத மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாராயணம், சாற்று முறை நடைபெற்றன. மகா சம்ரோக்ஷண விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தார்கள் செய்து இருந்தனர். திருவெண்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்