மகா சிவராத்திரி; பிரசாதமாக லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

மகா சிவராத்திரி; பிரசாதமாக லட்டு தயாரிக்கும் பணி தீவிரம்

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவரமாக நடக்கிறது. 

விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க லட்டு தயாரிக்கும் பணி தீவரமாக நடக்கிறது.

விழுப்புரம் ப்ரஹன் நாயகி சமேத கைலாசநாதர் திருக்கோவிலில் வருகின்ற 8ம் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி முன்னிட்டு அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக கோவிலில் பிரதோஷ பேரவை சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள 40,000 லட்டுகள் கடந்த இரு தினங்களாக கோவிலின் பரிசாரகர் பாலசுப்பிரமணியம் தலைமையில் 12 பேர் அடங்கிய குழு இந்த தயாரிப்பில் ஈடுபட்டனர்.

சிவராத்திரி அன்று நடைபெறும் நான்கு கால பூஜை போது லட்டு பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட இருக்கிறது என பிரதோஷ பேரவையின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

Tags

Next Story