டிரினிடி மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் !!
டிரினிடி மகளிர் கல்லூரி
டிரினிடி மகளிர் கல்லூரி
டிரினிடி மகளிர் கல்லூரி
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் சார்பில் "மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா" இன்று கல்லூரி வளாகத்தில் (11/12/2024) கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயல் இயக்குநர் அருணா செல்வராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் எம் ஆர் லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினார். வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்திவைத்தார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மாவட்டம் - மோகனூர் வட்டம் - அணியாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். புனிதா கலந்து கொண்டு மாணவிகளிடம் உரையாற்றினார். பாரதி ஒரு தமிழ் கவிஞர் மட்டுமல்ல, அவர் எழுத்தாளர், ஆசிரியர், பத்திரிகை ஆசிரியர், பல மொழிக் கற்றவர், சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமை கொண்டவர் என்றார். தமிழ் துறை உதவிப் பேராசிரியை சி. கோபியா நன்றியுரை ஆற்றினார். துறைத் தலைவர்கள் தா.க. அனுராதா, இர. சாவித்திரி உட்பட பேராசிரியப் பெருமக்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.