மகாகவி பாரதியார், இராஜாஜி பிறந்த நாள் விழா

நாமக்கல் கவிஞர் நூலகத்தில் மகாகவி பாரதியார், இராஜாஜி பிறந்த நாள் விழா

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் கவிஞர் சிந்தனைப் பேரவை, கவிஞர் நினைவு இல்ல நூலக வாசகர் வட்டம் சார்பில் மகாகவி பாரதியார், இராஜாஜி ஆகியோர் பிறந்தநாள் விழா நடைபெற்றது, நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் டி.எம். மோகன் அறிமுகவுரை நிகழ்த்தினார். விழாவில் மகாகவி பாரதியார் படத்துக்கு ராமசாமி, இராஜாஜி படத்துக்கு வடிவேல் ஆகியோர் மாலையிட்டு மரியாதை செழுத்தினர். விழாவில் பாரதியார் விருது வழங்கப்பட்டது. அதில் மோகனூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வீரராகவன், கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் ஆகியோருக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் யுவராஜா கோபாலசாமிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர் ப.எழில் செல்வன் தலைமையில் பாரெங்கும் பாரதி கவியரங்கம தலைப்பில் நடைபெற்றது. தமிழாசிரியர் ஆ.ராமு காலங்களைக் கடந்த பாரதி என்ற தலைப்பிலும், தமிழாசிரியர் செல்வ.செந்தில்குமார் பாரதி ஒரு மனிதநேய கவிஞர் என்ற தலைப்பிலும், கவிஞர் சேந்தை செழியன் பெண்ணியம் போற்றும் பாரதி என்ற தலைப்பிலும், பேராசிரியர் அனுராதா பாரதி ஒரு தீர்க்கதரிசி என்ற தலைப்பிலும், பாரதியாரின் தனிச்சிறப்புகளை கவி பாடினர். செல்வி இனியா எழில்செல்வன் அவர்கள் பாரதி... யார்? என்ற தலைப்பில் பேசினார் விழாவில் மருத்துவர் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ரயில் பயணிகள் சங்க தலைவர் சுப்பிரமணி, செங்கோடன், அமல்ராஜ், ரவீந்திரன், ராமன், ஆசிரியர் ஜெகதீசன், கிருஷ்ணகுமார் ரவி, வடிவேல், ரபி, துரைசாமி, நடராஜன் மற்றும் நூலகப் புரவலர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் வாசகர் வட்டப் பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Tags

Next Story