தனியார் பள்ளியில் மகரிப் சிறப்புத் தொழுகை

தனியார் பள்ளியில் மகரிப் சிறப்புத் தொழுகை

 சமத்துவ இப்தார் நோன்பு 

தரங்கம்பாடி அருகே தனியார் பள்ளியில் நடந்த சமத்துவ இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உலக நன்மை வேண்டி "மகரிப்" எனும் சிறப்புத் தொழுகை நடத்தினர்.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு வைத்தல், புனித ரமலான் மாதம் தொடங்கி நோன்பு கடைபிடித்து வருகின்றனர். அந்தவகையில், தனியார் பள்ளியில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி தாலுக்கா அரங்கக்குடியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக பள்ளி மாணவர்கள் உலக நன்மை வேண்டியும், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியும் "மகரிப்" எனும் சிறப்புத் தொழுகை நடத்தினர். சிறு குழந்தைகள் தொழுகை செய்தனர். அதனை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நோன்பு திறப்பத்தற்கான பேரீச்சம் பழம் , கஞ்சி, தண்ணீர், ஜுஸ் ஆகிய உணவுகளை பள்ளி ஆசிரியர்கள் பரிமாறினர். அனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story