மகாசக்தி கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா!

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள மகாசக்தி கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது.
திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள மகாசக்தி கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் போயம்பாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 19 ஆம் ஆண்டுபொங்கல் மற்றும் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு கடந்த 25 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் பொங்கல் விழா தொடங்கியது. நேற்றைய தினம் கம்பம் கும்பம் நடப்பட்டது . அதனைத் தொடர்ந்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story