மகாசிவராத்திரி விழா

மகாசிவராத்திரி விழா


உசிலம்பட்டியில் 2வருடங்குப்பிறகு பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பெட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


உசிலம்பட்டியில் 2வருடங்குப்பிறகு பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பெட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உசிலம்பட்டியில் 2வருடங்குப்பிறகு பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு மகாசிவராத்திரியை முன்னிட்டு பெட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி இணைந்து கொண்டாடும் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் மாசிப்பச்சை மகாசிவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த இரு வருடங்களாக கோவில் கும்பிடுவதில் பங்காளிகளுக்குள் ஏற்ப்பட்ட பிரச்சனையிலால் திருவிழா நடைபெறாத கூழ்நிலையில் இந்த வருடம் உடன்பாடு ஏற்ப்பட்டதால் திருவிழா நடைபெறுகின்றது.

இதற்காக உசிலம்பட்டி சின்னக்கருப்பு சாமி கோவிலிருந்து பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு பெட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.ஒச்சாண்டம்மனின் நகைகள் சேலைகள் உள்ளதாக கருதப்படும் பெட்டிகளுக்கு முன்னதாக சின்னக்கருப்புசாமி கோவிலில் பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்த பின் பெட்டியை தலையில் சுமந்தபடி சுமார் 15 கி.மீட்டர் தொலைவிலுள்ள பாப்பாபட்டிக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்றனர்.உடன் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பெட்டியுடன் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு நடந்தபடி சென்றனர்.கோவில் திருவிழாவையொட்டி உசிலம்பட்டி பகுதியில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Next Story