மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஆய்வு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ஆய்வு

ஆய்வு பணியில் அதிகாரி

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆய்வு செய்தார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கிளிப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கிளிப்பட்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆய்வு செய்து பேசியதாவது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் 100 நாள் வேலைகளை நீங்கள் சரியான முறையில் செய்து பணிகளை விரைந்து முடியுங்கள்

.அதே போல் யாரும் 100 நாள் வேலையில் விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டாம் .அரசு உங்களுக்காக வழங்கப்படும் திட்டம் இது .இந்த திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதாலும் ,ஏழை எளிய மக்களுக்கு இதன் மூலம் வழங்கப்படும் மான்யங்கள் சரியான முறையில் சென்றடைய வேண்டும் என்பதற்காகவும் ,

இந்த 100 நாள் வேலை வழங்கப்படுகிறது .அதனால் நீங்கள் 100 நாள் வேலையை சரியான முறையில் செய்யுங்கள். உங்களுக்கு உடனுக்குடன் 100 நாள் வேலை கிடைக்கும் என்று ஒன்றிய குழு தலைவர் 100 நாள் பணி செய்யும் பொதுமக்களுக்கு கூறினார்.

இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, இன்ஜினியர் தமிழரசி, மற்றும் மக்கள் நல பணியாளர் பொது மக்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story