கள்ளக்குறிச்சியில் மகாவீரர் ஜெயந்தி விழா

அன்னதானம் வழங்கல்
கள்ளக்குறிச்சியில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணியளவில் சுபேதார் தெருவில் இருந்து மந்தைவெளி, காந்திரோடு, சேலம் மெயின்ரோடு, கவரைத்தெரு வழியாக ஜெயின்பவன் வரை அமைதி ஊர்வலம் நடந்தது. அமைதி ஊர்வலத்திற்கு, ஸ்ரீஜெயின் சங்கத் தலைவர் தேஜ்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சஜ்ஜன்மல் முன்னிலை வகித்தார். வழிநெடுக்கிலும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
. தொடர்ந்து, நான்குமுனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி எஸ்.பி., சமய்சிங்மீனா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகாவீர் நவயுக் மண்டல் தலைவர் யோகேஷ், செயலாளர் ஆஷீஜ் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில், டி.எஸ்.எம்., ஜெயின் கல்லுாரி தாளாளர் மனோகர் குமார், ஹனுமந்தகுமார், குஷல்ராஜ், சந்திரபிரகாஷ், வீராஜ், தீரஸ், விசால், சுனில் மற்றும் ஜெயின் சங்க உறுப்பினர்கள், இளைஞரணி மகாவீர் நாயுக்மண்டல் மற்றும் மகிளா மண்டல் உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
