கீழம்பி ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்

கீழம்பி ஊராட்சியில் மகிளா சபை துவக்கம்
X

மகளிர் சபை கூட்டம் 

காஞ்சிபுரம் அருகே கீழம்பியில் மகளிர் சபை துவக்கப்பட்டு உள்ளது
காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், ஊராட்சி கூட்டம், சிறப்பு கிராம சபை கூட்டங்கள் மட்டுமே நடைபெறுகின்றன. முதல் முறையாக, வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில், கடந்த ஜனவரி மாதம் பாலர் சபை கூட்டம் மற்றும் மகிளா சபை என, அழைக்கப்படும் மகளிர் சபை துவக்கப்பட்டு உள்ளது. அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், கீழம்பி கிராமத்தில், நேற்று, மகளிர் சபை துவக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு, கீழம்பி ஊராட்சி தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார். மறைமலை நகர் மாநில ஊரக வளர்ச்சி பயிற்சியாளர் கோகுல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இயற்கை சாகுபடி ஊக்குவிக்க வேண்டும், சுய தொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டு உள்ளன. காஞ்சிபுரம் ஒன்றிய மகளிர் திட்ட மேலாளர் கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்."

Tags

Next Story