மேட்டூர் அணையில் பராமரிப்பு பணி

மேட்டூர் அணையில் பராமரிப்பு பணி

மேட்டூர் அணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.

மேட்டூர் அணையில் தற்போது பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றும் போது சுரங்க மின் நிலையத்தில் 200 மெகாவாட் உற்பத்தியும், அணை மின் நிலையத்தில் 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்ததால் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு கடந்த அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்ட நீர் 250 கன அடியாக குறைக்கப்பட்டதால் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் அணை மின் நிலையத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணை மின் நிலையத்தில் இருந்த ராட்சத தடுப்பு வலையம் கிரேன் உதவியுடன் வெளியே எடுக்கப்பட்டது. தடுப்பு வலைத்தில் இருந்த துரு அகற்றப்பட்டு கிரீஸ் மற்றும் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி இன்னும் மூன்று நாட்களில் நிறைவடையும் என அணை மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story