தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில்  தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில்  தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் ரயில்வே நிர்வாகம் கொண்டு செல்லவேண்டும் என்று எம்பவர் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு , எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கெளரவ செயலாளர் ஆ.சங்கர் அனுப்பியுள்ள புகார்; தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை முன்னிட்டு முதலாவது நடைமேடை முற்றிலுமாக தடுப்பு வேலிகள் அமைத்து இந்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதலாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வந்த முத்துநகர் விரைவு ரயில், மைசூர் விரைவு ரயில் உள்ளிட்ட அனைத்து ரயில்களுமே தற்போது இரண்டாவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்த பணிகள் நடைபெற்று வந்தாலும் இப்படி நடைமேடை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது குறித்து பொதுமக்களுக்கு எந்த வகையிலும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் ஏதும் தரப்படவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்அளிக்கிறது. மேலும் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் கூட எந்த ஒரு செய்தியும் வரவில்லை. பல பயணிகள் ரயில் நிலையத்துக்கு வந்த பிறகுதான் இப்படி பராமரிப்பு பணிகள் நடைபெறுவது அறிந்து வேக வேகமாக நடைமேடை மேம்பாலம் வழியாக முதலாவது நடைமேடையில் இருந்து இரண்டாவது நடைமேடைக்கு செல்கிறார்கள். ஆனால் சுமார் 8. 20 மணிக்கு ஒரு குடும்பத்தினர் ஓடி வந்து முதலாவது நடைமேடையில் ரயில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக சுமைகளை தூக்கிக் கொண்டு ஓடோடிச் சென்று ரயில் ஏறிய காட்சி மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது.

அடுத்ததாக 2 ஆண்கள் கையில் லக்கேஜியுடன் ஓடி வந்து பராமரிப்பு பணிகள் நடந்து வரும் முதலாம் நடை மேடையில் இறங்கி அங்குள்ள தண்ணீரில் விழுந்து தடுப்பு வேலியை தாண்டி ரயில் ஏறிச் சென்ற காட்சியும் நெஞ்சை பதற வைத்தது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்தில் விசாரித்த போது தூத்துக்குடி ரயில் நிலைய நிர்வாகம் சார்பில் செய்தி நாளிதழ்களுக்கும் காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் செய்தி குறிப்பு அனுப்பியதாகவும் ஆனால் அந்த செய்தியை எந்த ஒரு செய்தித்தாளும் ஊடகமும் வெளியிடவில்லை என்ற தகவலும் கிடைத்தது.

இந்த முதலாம் நடைமேடை பராமரிப்பு பணிகள் முடிவடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி கீழூர் நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விரைவு ரயில்களும் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்திலும் நின்று பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் புறப்பாடு தற்காலிக நிறுத்த வசதியை ஏற்படுத்தி தருமாறு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுவிக்கிறோம்.

Tags

Next Story