ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி : ரயில் சேவையில் மாற்றம்

ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி : ரயில் சேவையில் மாற்றம்
தூத்துக்குடி ரயில் நிலையம் 
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 2வது பிளாட்பாரத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கிறது. 2வது பிளாட்பாரத்தில் நெல்லை பாசஞ்சர் ரயில்கள் நின்று செல்லும். இந்நிலையில் முதல் பிளாட்பாரத்தில் தண்டவாளங்கள் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தண்டவாளத்தை மாற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் நேற்று துவங்கியது. வரும் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் முத்துநகர் மற்றும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள் 2வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது பிளாட்பாரத்திற்கு நடை மேடையில் சுமார் 100 படிகள் ஏறி இறங்க வேண்டும். இதனால் முதியார்கள் மற்றும் மாற்றித்திறனாளிகளுக்காக 1வது ரயில்வே கேட் வழியாக 2வது பிளாட்பாரத்ததிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவையில் மாற்றம்: தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் (17.03.24, 24.03.24 மற்றும் 31.03.24) ரயில் சேவையில் மாற்றம்: 1) வண்டி எண் 06668 திருநெல்வேலி - தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. 2) வண்டி எண் 06667 தூத்துக்குடி - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு (முன்பதிவு இல்லாதது) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது 3) வண்டி எண் 19567(விவேக் எக்ஸ்பிரஸ்) ஞாயிறு இரவு 11.35 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக திங்கட்கிழமை அதிகாலை 01.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story