பராமரிப்புப் பணிகள்: திருச்செந்தூா் அதிவிரைவு ரயில் ரத்து

பராமரிப்புப் பணிகள்: திருச்செந்தூா் அதிவிரைவு ரயில்  ரத்து

ரயில் 

ரயில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்செந்தூா் அதிவிரைவு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை கோட்டத்தில் செய்துங்கநல்லூா் - ஸ்ரீவைகுண்டம் இடையே தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை எழும்பூா் - திருச்செந்தூா் அதிவிரைவு ரயிலானது (20605) வரும் ஜன. 1 முதல் 5 ஆம் தேதி வரை திருநெல்வேலி - திருச்செந்தூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் அதிவிரைவு ரயிலானது (20606) வரும் ஜன. 1 முதல் 5 ஆம் தேதி வரை திருச்செந்தூா் - திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து இரவு 9.35 மணிக்குப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story