படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்கள் - அமைச்சர் ஆய்வு

படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்கள் -  அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழுவாள் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை நேரில் பார்வையிட்ட போக்குவரத்து துறை அமைச்சர், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர், இந்நிலையில் மக்காச்சோளம் விளைச்சல் நேரத்தில் போதுமான மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் வாடி வந்த நிலையில் மேலும் படைப்புழு தாக்கத்தினால் மக்காச்சோளம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பல்வேறு நாட்களில் ஆட்சியரிடம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில், மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், மக்காச்சோளம் பாதிப்பு குறித்து தகவல் அறிந்து, குன்னம் வட்டம் பெரிய பெண்மணி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் மக்காச்சோள பயிர்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், அதனைத் தொடர்ந்து விவசாயிகளிடம் மாவட்டத்தில் உள்ள மக்காச்சோள பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு செய்து இதற்கான நிவாரணத்தை தமிழக அரசிடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியின் போது அரசுத்துறை அலுவலர்கள் விவசாயிகள், திமுக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.


Tags

Next Story