ம.க.ஸ்டாலின் நிச்சயமாக வெற்றி அடைவார்: ரமணன் வாழ்த்து
பாமக வேட்பாளருக்கு ரமணன் வாழ்த்து
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
செம்பனார்கோயில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த வேட்பாளர் ம.க ஸ்டாலினை சென்னை வானிலை மைய முன்னாள் இயக்குனர் வானிலை ரமணன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ம.க.ஸ்டாலின் இன்றோ நேற்றோ எனக்கு பரீட்சையமானவர் அல்ல ஆரம்ப கால முதலே நட்பு அதிகம் ம.க ஸ்டாலின் அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் இப்பேற்பட்ட மனிதர்களை பார்ப்பது அரிது.
எனது நண்பரான மக ஸ்டாலின் நிச்சயமாக தேர்தலில் வெற்றி அடைவார் அவர் வெற்றி வேட்பாளர் எனவும் அரவணைத்து பாராட்டினார். முன்னதாக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் வானிலை ரமணனுக்கு சால்வை அணிவித்து வணங்கி ஆசி பெற்றார்.