மரத்தடியில் பட்டாசு தயாரிப்பு - இருவர் கைது
காவல் நிலையம்
விருதுநகர் அருகே மரத்தடியில் பட்டாசு தயாரித்த 2 பேரை கைது செய்த போலீசார் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் வச்சசக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பொன்மீனா இவர் வச்ச கார பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னவாடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு இயங்கி வரும் ஸ்ரீ அபிநயா ஃபயர் ஒர்க்ஸில் விபத்து ஏற்படும் என தெரிந்தும் மரத்தடியில் கவனக்குறைவாக பட்டாசுகள் தயாரித்த பரமசிவம் மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 15 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story