மக்கள் நீதி மையம் கோரிக்கை - வடிகால் சீரமைப்பு பணிகள் துவக்கம்

மக்கள் நீதி மையம் கோரிக்கை -  வடிகால் சீரமைப்பு பணிகள் துவக்கம்
X

சீரமைப்பு பணிகள்

மக்கள் நீதி மய்யம் புகாரின் படி தட்டான்குட்டை ஊராட்சியில் வடிகால் சீரமைப்பு பணிகள் துவங்கியது. இது குறித்து மக்கள் நீதி மய்யம், மாவட்ட மகளிரணி நிர்வாகி சித்ரா கூறியதாவது: நாம்ப்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, 11வது வார்டு பகுதியில் வடிகால் கட்ட 2 ஆண்டுகள் முன்பு பணிகள் துவங்கியது. வடிகாலின் பக்கவாட்டு சுவர் உயரமாக இருப்பதால், அதன் ஓரமாக உள்ள வீடுகளுக்கு, குடியிருப்புவாசிகள் செல்ல பெரும் அவஸ்தை ஏற்பட்டு வருகிறது. குடியிருப்புவாசிகளின் டூவீலர்கள் வடிகாலின் உயரமான சுவற்றால், தங்கள் வீடுகளின் முன்பு நிறுத்த முடியாமலும், பாதுகாப்பு இல்லாத நிலையும் உண்டாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருகிறது. மேலும் மழை வந்தால், இரு பக்க சுவர்களுக்கு பின்னால் மழை நீர் போக வழியில்லாமால் குளம் போல் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படுகிறது. இதனால் சேறும், சகதியுமாக ஆவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் சாக்கடைக்குள் பதித்து உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. இப்பகுதி பொதுமக்கள் இந்த குழாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தும்போது தொற்றுநோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து பலமுறை தட்டான்குட்டை ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தப் பலனுமில்லை என்று கூறினார்கள். இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து, வடிகால் சீரமைப்பு பணி துவங்கியது. மாவட்ட கலெக்டர், ஊராட்சி தலைவர் புஷ்பா, வார்டு உறுப்பினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story