மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் - துவக்கி வைத்து அமைச்சர்
மக்களுடன் முதல்வர்
மதுரை மாநகராட்சி மண்டலம் 3மற்றும் 2 ஆகிய மண்டலங்களில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2023 அன்று தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர் நிகழ்வாக மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.57 ஆரப்பாளையம் பகுதியில் சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இம்முகாம்கள் 18.12.2023 முதல் 06.01.2024 வரை நடைபெறுகிறது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டு சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண் 75 சுந்தர்ராஜபுரம் தனியார் மஹாலிலும் மண்டலம் 2 வார்டு எண் 21 ,22ஆகிய வார்டு பகுதிகளுக்கு திருவிக மாநகராட்சி பள்ளியிலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது .
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முத்தான திட்டங்களின் ஒன்றாக மக்களுடன் முதல்வர் திட்டம் இருந்து வருவதுடன் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாமில் பொதுமக்கள் முழுஅளவில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா,வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மண்டலத் தலைவர்கள் திருமதி.பாண்டிச்செல்வி, உதவி ஆணையாளர்கள் சுரேஷ்குமார், அருணாச்சலம் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரன்,மகாலெட்சுமி மற்றும் உதவிப்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.