மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் - அமைச்சர் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் முகாம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒப்புகைச்சான்று வழங்கினார்
ஒட்டன்சத்திரம் நகராட்சி ஒன்று முதல் 18 வரையுள்ள வாா்டுகளைச் சோந்தவா்களுக்காக நடைபெற்றது. இந்த முகாமுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.முகாமில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ஒப்புகைச்சான்று வழங்கினாா்.தொடா்ந்து, ஒட்டன்சத்திரம் லட்சுமிபுரம் முதல் கூடலிங்கபுரம் வரை ரூ.5.49 கோடியில் தடுப்புச் சுவருடன் கூடிய மழை நீா் வடிகால், புளியமரத்துக்கோட்டை, புலியூா்நத்தம், ஜோகிபட்டி, எல்லப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் வகுப்பறைக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.
Tags
Next Story