திருக்காட்டுப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தஞ்சாவூர் மாவட் டம் திருக்காட்டுப்பள்ளியில் 'மக்களுடன் முதல்வர்' முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. பழமார்நேரி சாலை மாலா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில், தமிழ்நாடு மின்சார வாரியம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. முன்னதாக, திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் கல்லணை செல்லக்கண்ணு, தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாகின் அபுபக்கர், பேரூராட்சி தலைவர் ப.மெய்யழகன், செயல் அலுவலர் ஆ.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர். முகாமில் 408 மனுக்கள் பெறப்பட்டன. 10மனுக்களுக்கு உடனடி தீர்வு அளிக்கப்பட்டது. 398 மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பரிசீலனைக்காக அனுப்பப்பட்டன. இதில், பூதலூர் வட்டாட்சியர் அ.மரியஜோசப், பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story