புஷ்பகிரியில் மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா

புஷ்பகிரியில் மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழா
தேர் திருவிழா
பர்கூர் அருகே உள்ள புஷ்பகிரியில் மலர்மலை மாதா திருத்தல தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் வரட்டனப்பள்ளி அருகே புஷ்பகிரியில் அமைந்துள்ள புனித மலர்மலை மாதா திருத்தல தேர்திருவிழா நடைபெற்றது. கடந்த 21ஆம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. நாள்தோரும் ஆலயத்தின் பங்கு தந்தையர்களால் நவநாள் ஜெபங்களுடன், சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த விழாவின் இறுதி நாள் தேர்பவணி நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜையுடன் புது நன்மை மற்றும் உறுதி பூ சூதல் ஆகிய அருட்கொடைகள் சிறுவர்க்கும், சிறுமிகளுக்கும் வழங்கப்பட்டது.

பின்னர், புனித மலர் மாலையில் மாதாவினை அலங்கரிக்கப்பட்ட தேர் பவணி ஊர்வலம் நடைபெற்றது. அருட் இருதயநாதன் புனித நீர் தெளித்து, துவக்கி வைத்தார். அப்போது பவனி வந்த திருத்தேரின் மீது பக்தர்கள் உப்பு,மிளகு ஆகியவற்றினை தூவி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் இந்த நிகழ்வில் ஏராளமான கிருத்துவ மக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story