மலையம்பாக்கத்தில் புதர் மண்டிய கோவில் வளாகம்

மலையம்பாக்கத்தில் புதர் மண்டிய கோவில் வளாகம்

கைலாசநாதர் கோவில் 

மலையம்பாக்கம் ஊராட்சி, வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நுழைவு பகுதி வளாகம் பராமரிப்பின்றி உள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் அருகே, மலையம்பாக்கம் ஊராட்சி, வடக்கு மலையம்பாக்கம் பகுதியில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் நுழைவு பகுதி வளாகம் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதில் இருந்து விஷ ஜந்துக்கள் வருவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். கோவில் எதிரே புதர் மண்டியுள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story