வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு - காத்திருக்கும் பொதுமக்கள்

உங்கரானஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட உத்தனூர் வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட உங்கரானஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட உத்தனூர் வாக்குச்சாவடி எண் 58-ல் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் காலை 7 மணி முதல் பொதுமக்கள் வாக்கு செலுத்த முடியாமல் அவதிப்பட்டு நீண்ட வரிசையில் நின்று காத்து கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story