மல்லசமுத்திரத்தில் இரவுகாவலர் பணி, அலுவலக உதவியாளர் பணி நேர்காணல்

மல்லசமுத்திரத்தில் இரவுகாவலர் பணி, அலுவலக உதவியாளர் பணி நேர்காணல்
X

மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இரவு காவலர்பணி, அலுவலக உதவியாளர் பணிகளுக்கு நேற்று நேர்காணல் நடந்தது.

மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இரவு காவலர்பணி, அலுவலக உதவியாளர் பணிகளுக்கு நேற்று நேர்காணல் நடந்தது.

மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஒரு இரவு காவலர் பணிக்கும், 3 அலுவலக உதவியாளர் பணிகளுக்கும் காலிப்பணியிடங்களாக அறிவிக்கபட்டிருந்தது. இதில், இரவு காவலர்பணிக்கு 53பேருக்கும், அலுவலக உதவியாளர் பணிக்கு 144பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம், நேற்று, நாளை, நாளை மறுநாள் என நான்கு நாட்கள் நேர்காணல் நடைபெறுகின்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி தலைமை வகித்தார். சேர்மன் அலுமேலுவிஜயன், துணை சேர்மன் வனிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில், கலந்துகொண்ட பெண்கள் அலுவலகம் முன்பாக சைக்கிள் ஓட்டி காட்டினர்.

Tags

Next Story