மல்லசமுத்திரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

மல்லசமுத்திரத்தில் ரூ.1.80 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
மல்லசமுத்திரத்தில் நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில் மொத்தம் ரூ.1.80லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இதுகுறித்து, மேலாளர் கணேசன் தெரிவித்ததாவது; திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த தேங்காய் பருப்பு ஏலத்தில் மொத்தம் 58 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் ரூ.70.75 முதல் ரூ.83.15வரையிலும், இரண்டாம் தரம் ரூ.53.75 முதல் ரூ.66.25வரையிலும் என மொத்தம் ரூ.1.80லட்சத்திற்கு ஏலம் நடந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story