மல்லசமுத்திரத்தில் ஆனி மூல திருத்தேர் உற்சவம்

மல்லசமுத்திரத்தில் ஆனி மூல திருத்தேர் உற்சவம்


திருத்தேர் விழா

மல்லசமுத்திரம் அழகராயப் பெருமாள், சோழீஸ்வரர் கோவில்களில் நடந்த ஆனி மூல திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் சோழர்கள் காலத்திய பழமை வாய்ந்த சோழீஸ்வரர் கோயில் மற்றும் அழகராயப் பெருமாள் செல்லாண்டியம்மன் கோவில் ஆகியவை உள்ளது இங்கு ஆனி மூலத் தேர் திருவிழாவெகு விமர்சையாக நடப்பது வழக்கம்.இந்த ஆண்டு தேர்த் திருவிழாகடந்த 12ஆம் தேதி செல்லாண்டியம்மன் கோவில் கொடியேற்று விழா உடன் தொடங்கியது கடந்த நாலாம் தேதி செல்லாண்டியம்மன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி அருள்மிகு சோழீஸ்வரர் அருள்மிகு அழக ராயப் பெருமாள்கோவில்கள் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மண்டபக் கட்டளைகள் நடந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆனி மூல திருத்தேர் உற்சவம் திருத்தேர் வடம் பிடித்தலுடன் நடைபெற்றது.இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் துணை ஆணையர் நந்தகுமார் நாமக்கல் உதவி ஆணையர் சாமிநாதன் நரசிம்ம சாமி கோவில் உதவிஆணையர் சாமிநாதன் குமாரபாளையம் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் வடிவுக்கரசி உள்ளிட்ட பல்வேறு கோவில்களின்செயல் அலுவலர்கள் 60 பேர் பணியாளர்கள் 60 பேர்என இந்து சமய அறநிலையத் துறையினரும் திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் தலைமையில் 4 டி எஸ் பி க்கள் எட்டு காவல் ஆய்வாளர்கள், 10 காவல் உதவி ஆய்வாளர்கள் 235 காவலர்கள் பாதுகாப்புடன் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மண்டல துணை வட்டாட்சியர் வசந்தி வருவாய்த்துறை ஆய்வாளர் மல்லிகா தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலரது ஒத்துழைப்புடன் திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது முதலில் அழகராயப் பெருமாள் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது பெருமாள் தேர் நிலை சேர்ந்தவுடன் சோழீஸ்வரர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது இரு தரப்புக்கு இடையே தேர்த்திருவிழா தொடர்பாக அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த நிலையில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி தேர் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டது தேர் திருவிழாவை ஒட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொண்டு திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags

Next Story