மல்லசமுத்திரம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் - ஆர்.டி.ஓ ஆய்வு
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நடந்துவரும் கட்டுமான பணிகளை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் பேருந்து நிலையத்தில் நடந்துவரும் கட்டுமான பணிகளை திருச்செங்கோடு ஆர்.டி.ஓ ஆய்வு மேற்கொண்டார்.
மல்லசமுத்திரம் பேருந்து நிலையம் ரூ.89லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய பயணிகள் இருக்கைகள், சைக்கிள் ஸ்டேண்டு, தாய்மார்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இப்பணிகளை நேற்று, திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் ஆய்வுசெய்தார். அப்போது, சிறுசிறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிவர்த்திசெய்ய கூறினார். மேலும், மாற்றுதிறனாளிகள் பேருந்தில் ஏறிச்செல்ல வசதியாக வீல்சேர் வைக்கவும், அனைத்து பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர அறிவுறுத்தினார். செயல் அலுவலர் ராஜசேகரன், ஒப்பந்ததாரர் அண்ணாதுறை மற்றும் அரசுஊழியர்கள் உடனிருந்தனர்.
Tags
Next Story