மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டம்

மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில்  தமிழ்ப்புத்தாண்டு  கொண்டாட்டம்

கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

மல்லூர் வீ.ஜி. விகாஸ் பப்ளிக் பள்ளியில் கடந்த ஏப் 14 அன்று தமிழ்ப்புத்தாண்டு தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்குத் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றினை மேலும் விரிவாக்கும் பொருட்டு, 60 ஆண்டுகள் மற்றும் 27 நட்சத்திரங்களின் பெயர்களை ஒப்புவிக்கும் போட்டி,

கேம்லின் ஆர்ட் கண்டெஸ்ட் சார்பாக ஓவியப்போட்டி ஆகியன நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு தமிழில் மாணவர்கள் பிழையின்றி வாசிக்க, எழுத தேவைப்படும் உத்திகள் குறித்து மாணவர்களிடம் பேசினார்.

பள்ளி நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளி முதல்வர் கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story